தமிழர்களுக்குமட்டும் வருமான வரிரிட்டர்ன் ரீபண்ட் வரவில்லைபுகார்கள் வைக்கப்படுகின்றன
வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் இறுதி நாள் முடிந்துவிட்டது. ஜூலை கடைசியோடு இதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. ஏற்கனவே இதற்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கு பணம் வந்துவிட்டது.இப்படிப்பட்ட நிலையில் தமிழர்களுக்கு மட்டும் வருமான வரி ரிட்டன் ரீபண்ட் வரவில்லை என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் புகார் வைத்துள்ளார். அதில்,IncomeTaxreturn வடக்கில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் யாரை கேட்டாலும் வந்துவிட்டது என்கிறார்கள்.தமிழ்நாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெருன்பான்மையாக இன்னும் வந்து சேரவில்லை. யாருக்காவது வந்திருக்கா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.பல தமிழர்கள் தங்களுக்கு ரீபண்ட் வரவில்லை என்று கூறியுள்ளது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கான பதிலில் தமிழர்கள் பலரும் தங்களுக்கு இன்னும் வரவில்லை.ஒரு மாதத்திற்கும் மேலாக பணம் வரவில்லை என்று கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளனர்.வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் உங்களுக்கு இன்னும் வருமான வரி தொகை வரவில்லை என்றால் பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் பலருக்கும் கடந்த வாரங்களில் அனுப்பப்பட்டது.குறித்த நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கும் ரிட்டர்ன்ஸ் கிடைத்துவிட்டது. பலருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது. சிலருக்கு வருமான வரி ரிட்டர்ன்ஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான இன்டிமேஷன் அளிக்கப்பட்டுவிட்டது.முதலாவதாக, வருமான வரி ரிட்டர்ன்(ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவல் கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம்..
வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் உங்களுக்கு இன்னும் வருமான வரி தொகை வரவில்லை என்றால் பின்வரும் சோதனையை செய்யுங்கள்.https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித்துறை பக்கத்திற்கு செல்லவும். அதில் இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன் (ITR) ஸ்டேட்டஸ் பக்கத்தில் சென்று உங்கள் லாகின் விவரங்களை கொடுத்து லாகின் செய்யவும். இதில் 'இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்(ITR) ஸ்டேட்டஸ்'பகுதியை கிளிக் செய்தால் அதில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். அதன்பின் இ வெரிஃபிகேஷன் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். கடைசியாக processing மட்டும் கிரீன் ஆகாமல் இருக்கும். அப்படி இருந்தால் அதன் அர்த்தம் விரைவில் உங்கள் ரிட்டர்ன் சோதனை செய்யப்பட்டு பணம் கொடுக்கப்படும்.ஒருவேளை அது கிரீன் கலரில் இருந்தும் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் மெயிலை சோதனை செய்யவும். அதில், இன்கம் டேக்ஸ் நோட்டிஸ், விளக்கம் கேட்டு மெயில் எதுவும் வந்துள்ளதா என்று பார்க்கவும். ஏப்ரல் 1 முதல் ஜூலை21 வரை வருமான வரித் துறை அதிக அளவு தொகையை கொடுத்துள்ளது.கடைசியாக தாக்கல் செய்த பலருக்கு இந்த வாரம் கொடுக்கப்படும்.
0
Leave a Reply